Thursday, June 28, 2012

சென்னை வரலாறு

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்த பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

சென்னையில் அமைந்துள்ள‌ புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம் சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

1639ம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது.

ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.

1522ம் ஆண்டில் இங்கு வந்த போர்ச்சுகீசியர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்த பகுதி போர்ச்சுகீசியர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ம் ஆண்டில் சென்னை முதல் நகரசபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கான தளமாக இதை பயன்படுத்தினார். பின்னர் இது பிரிட்டிஷ் அரசின் இந்திய காலனி பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746ம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது. 1749ம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969ம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் 1996ம் ஆண்டு சென்னை மாற்றம் செய்யப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் வருடம் மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996ஆம் வருடம் தமிழக அரசாங்கம் மதறாஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது. வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரிட்டிஷார் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது.

மெட்ராஸ், சென்னை இந்த இரு பெயர்களைக் கேட்டதும் இனம்புரியாத ஒருவித ஈர்ப்பு மனதில் ஒட்டிக் கொள்கிறது. பெரும் நகருக்கே உரிய பரபரப்பு, மக்கள் அடர்த்தி, வாகனங்களின் இரைச்சல், பலதரப்பட்ட கலாசாரம் என்ற வழக்கமான அடையாளங்களையும் தாண்டி, சென்னை ஏதோ ஒரு விதத்தில் நம்மைப் பாதிக்காமல் இல்லை.

ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய பல்லவ சாம்ராஜ்யத்தில் துவங்கி, இன்றைய உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சுற்றுலா நகரமாக இருப்பது வரை சென்னையின் பல்வேறு பரிணாமமும், பரிமாணமும் ரசிக்கத்தக்கவை; வியப்புக்குரியவை.
பொதுவாக ஒரு விஷயத்தை அல்லது வரலாற்றை விவரிப்பது எனில், குறிப்பிட்ட செயலுக்கு முன், குறிப்பிட்ட செயலுக்குப் பின் எனப் பிரிப்பது வழக்கம். இவ்வகையில் சென்னையின் வரலாறு ஆங்கிலேயரின் வருகைக்கு முன், வருகைக்குப் பின் என இருவகையாகப் பார்க்கப்படுகிறது.

ஆங்கிலேயரின் வருகைக்கு முன், ஆங்காங்கு இருந்த குடியிருப்புகளும், மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததுமான சம்பவங்களுமே வரலாற்றில் இடம்பெறுகின்றன. அதுவும் அதிக அளவில் இல்லை. காரணம் 1639ம் ஆண்டுக்கு முந்தைய வரலாற்றுக்கு போதிய ஆதாரங்களும், விவரங்களும் இல்லை. கிடைக்கும் ஒரு சில கல்வெட்டுகள், சங்க இலக்கியப் பாடல்கள், கர்ணபரம்பரைக் கதைகளை வைத்து ஒருவாறு யூகிக்க முடிகிறது.
சென்னை ஒரு பெருநகராக வளர்ச்சி பெற்றது, ஐரோப்பியர்கள் குறிப்பாக ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர்தான். ஆகவே, சென்னையின் வரலாற்றில் ஆங்கிலேயேர்கள் தவிர்க்க இயலாத இடம்பெறுகின்றனர். இன்னும் சொல்வதானால், சென்னையில் ஆங்கிலேயர்கள் என்பதே சென்னையின் வரலாறாகவும் ஆகி விட்டது.

சில உணர்வுப்பூர்மான நிகழ்வுகள், இந்தியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது மாநகராட்சி, அகிம்சையின் வலிமையை உலகுக்கு உணர்த்திய காந்தி சத்தியாக்கிரக ஒலியை எழுப்பிய இடம், முதன்முதலில் மதுவிலக்கு அமலாக்கப்பட்ட இடம் என சரித்திரப் புகழ் வாய்ந்த சம்பவங்களும், நிகழ்வுகளும் சென்னையில் நடந்தேறி இருக்கின்றன.
மும்பையும், கல்கத்தாவும் ராஜதானி நகரமாக மாறுவதற்கு முன்னரே, சென்னை இந்தியத்துணைக்கண்டத்தின் ராஜதானி நகரமாக உருவெடுத்திருக்கிறது. இன்னும் இன்னும் ஏராளமான சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள சென்னை கொண்டாடப்பட வேண்டிய நகரம்.

எனவேதான், ஆங்கிலேயர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடத்தை தாமரல வெங்கடப்ப நாயக்கரிடம் இருந்து வாங்கிய ஆக.,22ம் தேதியை சென்னை தினமாக அறிவித்து, அதைப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
1639 ஜூலை 22 என்று ஒருசாரர் வாதிட்டாலும், ஆக., 22ம்தேதிதான் பதிவு செய்யப்பட்டது என சில ஆவணங்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, இன்னும் வேறு ஆதாரங்களும், சான்றுகளும் கிடைக்கும் வரை ஆக., 22 ம் தேதிதான் சென்னை தினமாகக் கொண்டாடப்படும்.

சென்னை வரலாறு # 01

சென்னை அரிய புகைப்படங்கள்


சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள செனட் இல்லம். 




ஸ்பென்செர் ப்ளாசாவின் பழைய தோற்றம் .




தாஜ் ஓட்டல் பணியாளர், தன் பாரம்பரிய உடையில்..




குதிரைவண்டிச் சவாரி.




மதராசப்பட்டினத்து மளிகைக் கடை




மூர் மார்க்கெட்டின் முகப்புத் தோற்றம்




கொத்தவால்சாவடி காய்கறி சந்தை




போர்டு' ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம்.




கார் ஷோரூம்.




பேங்க் ஆப் மெட்ராஸ் - 1935.




அன்றைய ஆம்புலன்ஸ் வாகனங்கள்.




சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் பக்கிங்ஹாம் கால்வாயில் படகு செல்லும் காட்சி - 1925.




மயிலாப்பூர் கோயிலின் அழகிய காட்சி - 1906.




சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்.




அரசினர் இல்லம்.



சென்னை வரலாறு # 02

சென்னை அரிய புகைப்படங்கள்


ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட, மெட்ராஸ் அரசு மாளிகை மற்றும் நிர்வாக கட்டடத்தின் தோற்றம். (இன்றைய கவர்னர் மாளிகை வளாகம்).




சென்னை கடற்கரைச் சாலை, 1915களில்....




சென்னை மாநிலக் கல்லூரியின் பழைய தோற்றம்.




ஆங்கிலேயர் காலத்திய கிருத்துவ தேவாலயம். கோதிக் கட்டடக்கலை 1871.






மெட்ராஸ் கிளப் 1901 களில்...






1895ல் சென்னை உயர் நீதி மன்றத்தின் தோற்றம்..






20ம் நூற்றாண்டு துவக்கத்தில் சென்னையின் ஆள் அரவமற்ற ஒரு வீதி.




மன்றோ சிலை.




பிரிட்டிஷாரின் நிர்வாகக் கட்டடம்.




பாரிமுனை .






பெட்ரோல் பங்க் .






மசூலா படகு,1851.






துறைமுகத்துக்கு சொந்தமான படகு .



சென்னை வரலாறு # 03

22- 8- 1639 சென்னை (Madras) என்ற நகரம் தோன்றிய நாள். இதே நாளில் தான் சென்னை நகரம் அமைப்பதற்கான இடம் வாங்கும் ஒப்பந்தம் கிழக்கிந்திய கம்பெனியின்சார்பாக ஃப்ரன்சிஸ்டே, மற்றும் ஆண்ருவ் கோகன் ஆகியோருக்கும் வெங்கடப்பநாயக்கர் என்றஅக்காலத்திய ராஜாவுக்கும் இடையே நடந்தது. அன்னாளை சென்னை பிறந்த நாளாக கணக்கில் கொண்டு சென்னை டே கொண்டாடப்படுகிறது.

சென்னை சில வரலாற்று நிகழ்வுகள்:

1786- முதல் அஞ்சலகம் திறக்கப்பட்டது.

1835 -மருத்துவக்கல்லூரி துவக்கப்பட்டது.

1842 -பச்சையப்பன் கல்லூரி துவக்கப்பட்டது

1856-இல் முதல் புகைவண்டி சென்னை ராயப்புரத்திற்கும் ஆர்காட்டிற்கும் இடையே ஓடியது. சென்னையின் முதல் புகைவண்டி நிலையம் ராயபுரம்.

அதே ஆண்டில் ஆசியர் பயிற்சி பள்ளி , சென்னை பல்கலைகழகம் ஆகியவையும் தோற்றுவிக்கப்பட்டது.

1871 -முதல் மக்கள் தொகை கணப்பெடுப்பு எடுக்கப்பட்டது.அப்பொதைய மக்கள் தொகை 3,97,552.

1882- சுதேசமித்திரன் முதல் தமிழ் தினசரி துவக்கப்பட்டது. முதல் தொலைபேசியும் துவக்கப்பட்டது.

1892 – உயர் நீதிமன்றம் துவக்கப்பட்டது. உயர்நீதிமன்ற கட்டிட கோபுரம் கலன்கரை விளக்கமாகவும் பயன்பட்டது.

1896 -கன்னிமரா நூலகம் திறக்கப்பட்டது.

1904 -முதல் கப்பல் துறைமுகம் , பின்னர் 1964 இல் நவீன மேம்படுத்தப்பட்ட துறைமுகம்

1911 -முதல் திரைப்படம் காட்டப்பட்டது.

1913 -முதல் திரை அரங்கம் , எல்பின்சன் எலெக்ட்ரிக் தியேட்டர் என்ற பெயரில் துவக்கப்பட்டது.

1920 -முதல் சட்டமன்ற தேர்தல், முதல் சி.முதல்வர்.சுப்பராயலு.சுதந்திர இந்தியாவில் முதல் முதல்வர் ஓ.பீ.ராமசாமி

1954 -இல் சென்னை விமான நிலையம் துவக்கப்பட்டது.

1996 -மெட்ராஸ் என்ற பெயர் சென்னை என மாற்றப்பட்டது.


அன்றும் இன்றும்!


ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டகாலத்தில் அவர்களது தாக்கதின் விளைவாக நம் நகரங்கள் மற்றும் தெருக்க்களுக்கு அவர்கள் பெயரை வைத்து சென்று விட்டார்கள் தற்போது அந்த பெயர்களுக்கு நம்மவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது சென்னையில் அவ்வாறு பெயர் மாற்றம் பெற்ற தெருக்களின் பட்டியலைப்பார்ப்போம்!

மவுண்ட் ரோட் – அண்ணா சாலை

பூனமல்லி ஹை ரோட் – பெரியார் ஈ.வி.ஆர் சாலை

எட்வர்ட் எல்லியட்ச் ரோட் – டாக்டர்.ராதா கிருஷ்ணன் சாலை

எல்லியட் பீச் ரோட் – சர்தார் படேல் சாலை

மவ்பரிஸ் ரோட் – டி.டி.கே சாலை

கமாண்டர் இன் சீப் ரோட் – எத்திராஜ் சாலை

நுங்கம்பாக்கம் ஹை ரோட் – உத்தமர் காந்தி சாலை

வாரென் ரோட் – பக்தவசலம் சாலை

லாயிட் ரோட் – அவ்வை ஷண்முகம் சாலை

ஆலிவர் ரோட் – முசிரி சுப்ரமணியம் சாலை

மான்டியத் ரோட் – ரெட் கிராஸ் சாலை

பைகிராப்ட்ஸ் ரோட் – பாரதி சாலை

பர்ஸ்ட் லைன் பீச் ரோட் – ராஜாஜி சாலை

ராயபேட்ட ஹை ரோட்- -திரு.வி.க சாலை

லாட்டிஸ் பிரிட்ஜ் ரோட் – டாக்டர் முத்து லஷ்மி சாலை மற்றும் கல்கி. கிருஷ்ண மூர்த்தி சாலை

சேமியர்ஸ் ரோட் – பசும்பொன்.முத்துராமலிங்கம் சாலை.

கிரிபித் ரோட் – மகா ராஜபுரம் சந்தானம் சாலை

வால் டாக்ஸ் ரோட் – வ.வு.சி சாலை.

ஆர்காட் ரோட் – என்.எஸ்.கே சாலை

ஹாரிஸ் ரோட்- ஆதித்தனார் சாலை

உங்களுக்கு தெரிந்த பெயர் மாறிய சாலைகளையும் சொல்லுங்கள். அப்படியே முடிந்தால் இந்த சாலைகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் பார்ப்போம்!

பெயரின் மறுபக்கம்!


1)P.T.உஷா – “பிளவுல்லகண்டி தெக்க பரம்பில் “.உஷா

2)S.P.பால சுப்ரமணியம் – ” ஷ்ரிபதி பண்டித ராயுல “.பாலசுப்ரமணியம்.

3)K.J.ஏசுதாஸ்- “கட்டசேரி ஜோசப்”. ஏசுதாஸ்.

4)A.R. ரஹ்மான் – “அல்லா ரக்கா. ரஹ்மான்” (அ) A.S. திலிப் குமார்

5)M.S.சுப்புலஷ்மி – மதுரை சுப்ரமணி அய்யர் .சுப்பு லஷ்மி

6)மனோ – நாகூர் பாபு

7)P.B. ஷ்ரினிவாஸ் – “பிரதிவாதி பயங்கரம் “ஷ்ரினிவாஸ்

8)மணிரத்னம் – “கோபால ரத்னம்” சுப்ரமணியன்

9)பாரதி ராஜா – P.சின்னசாமி

10)K.பாலசந்தர் – கைலாசம் பாலசந்தர்

11)சிரஞ்சீவி – கோனிடேலா சிவசங்கர வர பிரசாத்.

12)N.T.ராமா ராவ் – “நந்த மூரி தாரக”.ராமராவ்

13)S.V.ரங்கா ரவ் – “சாமர்லா வெங்கட்ட” ரங்கா ராவ்

14)T.R.பாப்பா – சிவசங்கரன்

15)L.R. ஈஷ்வரி – “லூர்து மாரி” ஈஷ்வரி

16)S.G. கிட்டப்பா – செங்கோட்டை கங்காதர கிட்டப்பா

17)M.R.ராதா – மெட்ராஸ் ராஜகோபால. ராதா கிருஷ்ணன்.

18)சின்னி ஜெயந் – கிருஷ்ணமூர்த்தி நாரயணன்.

19)V.V.S.லஷ்மண் – வங்கி பரப்பு வெங்கட் சாய் லஷ்மண்

20)கவாஸ்கர் – சுனில் மனோகர் கவாச்கர்

21)கபில் தேவ் – கபில் தேவ் ராம்லால் நிகாஞ்

இன்னும் பல பெயர்களின் பின்புலம் பற்றி தேடிக்கொண்டுள்ளேன் , தெரிந்தவர்கள் கூறலாம் , உதாரணமாக ,எம்.எஸ்.விச்வநாதன், எம்.கே.டி., டி.எம்.சவுந்தர் ராஜன் போன்றோரின் பெயர்களுக்கு.

சில ஊர்களின் இன்னாள் ,முன்னால் பெயர்கள்:


இன்னாள் – முன்னால்

1)பழனி – திருஆவினன் குடி

2)திருசெந்தூர் – திருசீரலைவாய்

3)பழமுதிர் சோலை – பழம் உதிர் சோலை.

4)திருத்தணி (அ) திருத்தணிகை – செருத்தணிகை

5)மதுரை – மாதுரையும் பேரூர்.

6)செங்கல்பட்டு – செங்கழுநீர்ப்பட்டு!

7)பூந்த மல்லி – பூவிருந்தன் வல்லி.

8)ஆர்காட் – ஆருக் காடு!

9)சோளிங்கர் – சோழ சிங்கபுரம்.

10)சிவகங்கை – நாலுகோட்டை

11)சிதம்பரம் – தில்லை

12)தருமபுரி – தகடூர்

13)ஷ்ரிவில்லிபுதுர் – நாச்சியார் கோயில்

14)அருப்பு கோட்டை – திரு நல்லுர்

15)எக்மோர் – எழுமூர்

16) சிந்தாதரி பேட்டை – சின்ன தரி பேட்டை .

17) கோடம்பாக்கம் – கோடலம் பாக்கம்

18)திருவல்லிகேணி – திரு அல்லி கேணி

19) பழவந்தாங்கல் – பல்லவன் தாங்கல்

20)தாம்பரம் – குனசீல நல்லுர் (அ) தர்ம புரம்

இன்னும் பல ஊர்களின் பெயரையும் தேடி வருகிறேன் தெரிந்தால் நீங்களும் சொல்லுங்கள்

தெரிந்த பெயர்களும் தெரியாத பெயர்களும்.


நமது சரித்திரத்திலும் ,மற்றும் உலக புகழ் பெற்றவர்களையும் நாம் ஒரு பெயரில் அறிந்து வந்திருக்கிறோம் ஆனால் அவர்களுக்கு இன்னொரு பெயர் இருப்பது அவ்வளவாக வெளித்தெரிவதில்லை.(எனக்கு இன்னொரு பேரு இருக்கு பாட்ஷா நு ரஜினி சொல்வது போல!)

புகழ்பெற்ற பெயர் – இயற்பெயர்

ஜீசஸ் கிரைஸ்ட் – ஜெகோவா or ஜோஷ்வா( ஜீசஸ் – காப்பவர் , கிரைஸ்ட் – தூதன் என்று சூட்டப்பட்ட பெயர் )

பாபர் – ஜாஹிர்ருதின்

ஹிமாயுன் – நஸ்ஸிருதின்

அக்பர் – ஜலாலுதின்

ஜெஹான்கிர் – நூருதின்

ஷா ஜெஹான் – குர்ரம்

அவ்ரங்கசெப் – ஆலம் கிர்

நூர்ஜஹான் – மெஹ்ருன்னிஸா

மும்தாஜ் – பானு பேகம்

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய் – மணிக்கர்னிகா

பூலித்தேவன் – காத்தப்ப துரை

மருது பாண்டி – மருதையன்

வீரபாண்டிய கட்ட பொம்மன் – கருத்தப்பாண்டி

ஊமைத்துரை – சிவத்தையா

தீரன் சின்னமலை – தீர்த்த கிரி

திருப்பூர் குமரன் – குமரேசன்

பாரதியார் – சுப்பையா (சுப்ரமணியம் என்பதை சுப்பையா என தான் அழைப்பர்கள்)

மருத நாயகம் – கான் சாகிப் யூசுப் கான்

மறைமலை அடிகள் – வேதாச்சலம்

பரிதிமாற்கலைஞர் – சூரிய நாரயன சாஸ்திரிகள்

திரு.வி.க – திருவாரூர் .விருத்தாசலம்.கல்யானசுந்தரம்.
(விருத்தாச்சலம் என்பது அவர் தகப்பனார் பெயர்)

கலைஞர் கருணாநிதி – தட்சிணா மூர்த்தி( இதுவே இயற் பெயர் , பின்னர் மாற்றிக்கொண்டார்)

எம்.ஜி.ராமச்சந்திரன் – ராம்சந்தர் என்றபெயரில்தான் நாடகங்களில்
நடித்தார், (எம் – மருதூர், ஜி – கோபால மேனன்)

ஜெ.ஜெயலலிதா – கோமள வல்லி

ரஜினி காந்த் – அனைவருக்கும் தெரியும் சிவாஜி ராவ் என்று ஆனால் அவர் நடத்துனராக வேலை செய்த போது குண்டப்பா என்றே அழைக்கப்பட்டர்!

அமெரிக்க டொலருக்குரிய '$' குறியீடு உருவாகியது எவ்வாறு ?....

அமெரிக்க நாணயமான டொலருக்குரிய குறியீடாக '$' என்கின்ற அடையாளம்
பயன்படுத்தப்படுவது நாமறிந்ததே... '$' என்கின்ற இந்த அடையாளம் எவ்வாறு
தோற்றம் பெற்றது...!!!





கைகளால்
எழுதப்பட்ட பழைய அமெரிக்க - ஸ்பானிஷ் புத்தகங்களில் "பேசோ(Peso)"
என்பதற்கான சுருக்கமாக 'ps' என்றே எழுதப்பட்டு வந்தது. இதிலிருந்தே
அமெரிக்க நாணயமான டொலருக்குரிய குறியீடாக '$' என்கின்ற அடையாளம் தோற்றம்
பெற்றதாம்.

'$' என்கின்ற இந்த அடையாளமானது முதன்முதலில்
ஸ்பானிஷ்-அமெரிக்களிடையே வணிகத் தொடர்புகள் தோற்றம் பெற்ற 1770களில் ஆங்கில - அமெரிக்க கையெழுத்து ஆவணங்களில் இடம் பெற்றன. 1800களின் பிற்பாடு '$' என்கின்ற அடையாளம் அச்சேறத் தொடங்கிவிட்டது.





”டொலர்”
என்கின்ற சொல்லானது ப்ளெமிஷ் அல்லது Joachimstaler என்கிற ஜெர்மன்
சொல்லின் daler (taler) என்கிற சொல்லிலிருந்து தோற்றம் பெற்றதாகும்.
அதாவது, ஜெர்மனிலுள்ள போஹெமியாவிலுள்ள(தற்போது இந்த இடம் செக் குடியரசில்
உள்ள Jáchymov ஆகும்) ஜோசிம்ஸ்டல் வெள்ளி சுரங்கங்களிருந்து
பெறப்படுகின்ற நாணயத்தைக் குறிப்பிடுவதாகும்.

ஸ்பானிஷ்-அமெரிக்க
காலனிகளிலும், அமெரிக்க சுதந்திர போர் நடைபெற்ற பிரிட்டிஷ் வட அமெரிக்க
காலனிகளிலும் பயன்படுத்தப்பட்ட நாணயத்திற்கு இந்த பதம் பின்னர்
பயன்படுத்தப்பட்டது. 18ம் நூற்றாண்டுக்குப் பிற்பாடு அமெரிக்க நாணயம்
இந்தப் பெயரினை உள்வாங்கிக் கொண்டது.

Facts About Taj Mahal



Taj Mahal, one of the Seven Wonders of the World, has been the pride of India since its inception.
Hailed as the ‘Epitome of Love and Beauty’, the great monument was built by Mughal Emperor Shah Jahan, after the death of his dearest wife Mumtaz Mahal, as a memorial.
 It is situated in the city of Agra in Uttar Pradesh, on the banks of river Yamuna.
The exceptional beauty of Taj Mahal has been luring visitors to its gates since ages and will continue to mesmerize them for centuries to come. 


Fun & Interesting Facts: 
  • Taj Mahal was built by Mughal Emperor Shah Jahan, in the memory of his beloved wife, Mumtaz Mahal.
  • Apart from being a UNESCO World Heritage Site, Taj Mahal is one of the Seven Wonders of the World.
  • The name Taj Mahal, with Taj meaning Crown and Mahal meaning Palace, literally means ‘Crown Palace’.
  • The construction work on Taj Mahal was started in the year 1632 and carried on for the next 16 years, ending in 1648.
  • It is believed that 20,000 workmen, who worked on a daily basis, were involved in the construction of Taj Mahal.
  • Taj Mahal is made purely of white marble, which was brought from the quarries of Makrana, in Nagaur district of Rajasthan.
  • It is said that as many as 1000 elephants were used to transport the white marbled used in construction of Taj Mahal.
  • The main entrance gate of Taj Mahal faces the Southern gate and is 151 feet by 117 feet. It rises to a height of 100 feet.
  • A very popular myth surrounding the Taj Mahal is that after its construction, Shah Jahan ordered amputation of the hands of all the workers. It is said that he wanted to make sure that no person on this earth will ever be able to recreate the magic of ‘Taj’.
  • The cost of construction of Taj Mahal, even at that time, came to 32 crore rupees.
  • The inlay work in the Taj Mahal has been done with 28 kind of rare, semi precious and precious stones.
  • Shah Jahan got Red sandstone from Fatehpur Sikri, Jasper from Punjab, Jade and Crystal from China, Turquoise from Tibet, Lapis Lazuli and Sapphire from Sri Lanka, Coal and Cornelian from Arabia and Diamonds from Panna, for Taj Mahal.
  • The calligrapher of Taj Mahal was Amanat Khan Shirazi, since his name appears at the end of an inscription on one of the gates of the Taj.
  • The main red sandstone gate of Taj Mahal is 30 feet high and stands adorned with verses from the Koran, in Arabic.
  • The central dome of Taj Mahal is 187 feet high at the centre.
  • The architecture of Taj Mahal represents a kind of fusion of Persian, Central Asian and Islamic architecture.
  • The main building of Taj Mahal is surrounded by gardens known as Charbagh (four gardens), measuring 300 X 300 mt.
  • Taj Mahal stands on a raised platform, with one minaret at each of the four corners of the plinth.
  • The minarets of Taj Mahal measure 41.6 m in height and have a deliberate outward slant.
  • The interior of the Taj Mahal comprises of a lofty central chamber, which has a crypt immediately below it.
  • There is a mosque on the left of Taj Mahal, made of red sandstone. It is used for conducting Friday prayers, even today.
  • There is another mosque, standing on Taj Mahal’s right hand side. Since it faces west, it is not used for prayers. It is believed to have been built for maintaining symmetry.

தாஜ்மகால் கட்ட‍ப்ப‍ட்ட‍ வரலாறு



மும்தாஜ் மறைந்தது தட்சிணப் பிரதேசத்தில். அங்கு புதைக்கப் பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தாஜ் மஹால் அமைந்திருக்கும் இடத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மும்தாஜ் மறைந்த அடுத்த ஆண்டே தாஜ் மஹால் கட்டும் பணி தொடங்கியது.




யமுனை நதிக் கரையில் ஷாஜகானே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். ராஜ புத்திர மன்னர் ஜெய்சிங்குக்குச் சொந்தமான தோட்டம்தான் இது. அதைக் கல்லறைக்காக வாங்க விரும்பினார் ஷாஜகான். பண மாகக் கொடுத்தால் நண்பர் தர்மசங்கடப்படுவாரோ என்று எண்ணி, நான்கு அரண்மனைகளைக் கொடுத்து தோட்டத்தை பண்டமாற்று செய்து கொண்டார். உடனே வேலை தொடங்கியது. கட்டடக்கலை-தோட்டக் கலை நிபுணர்கள், சிற்பிகள் உட்பட இரண்டாயிரம் பணியாளர்கள் களத்தில் இறங்கி உழைத்தனர்.




வெனிஸ் நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ் தாத் இஸா அஃபாண்டி, லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத்… இப் படி பலரது பெயர்கள் தாஜ்மஹாலுக்கு வரைபடம் தந்தவர்களின் பட்டியல் நீளுகிறது. ஒவ்வொன்றையும் நேரடியாகப் பாரத்து ஒப்பதல் அளித்தவர் ஷாஜகான். கல்லறையைச் சுற்றிலும் புனித குர்ஆனிலிருந்து வாசகங்களைச் செதுக்க விரும்பினார் ஷாஜ கான்.

அதற்காக, பாரசீகத்திலிருந்து அமனாத்கான் என்ற கலைஞர் வரவழைக்கப் பட்டு அந்தப் பணி நிறைவேற்றப்பட்டது. அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருடைய கையெழுத் தும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் இடம் பெற்றிருக்கும் ஒரே கையெழுத்து அவருடையதுதான்!





தாஜ்மஹாலில் மிகப் பிரம்மாண்டமான கல்லறை மண்டபமும், சதுர வடிவிலான அழகுத் தோட்டமும் அமைந்திருக் கிறது. மண்டபத்தின் இடது-வலது பக்கங்களில் சிவப்பு சாண்ட்ஸ்டோன் கட்டடங்கள் (ஒரு மசூதி மற்றும் அதற்கு இணையான இன்னொரு கட்டடம்) எழுப்பப்பட்டு உள்ளன. கல்லறை மண்டபத்தில் வெள்ளை மார்பிள் கற்களும், விலை யுயர்ந்த மணி வகைகளும் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

தொலைவிலிருந்து மட்டுமல்ல… வெளிப்புற வாயிலில் நுழைந்த பிறகு கூட பார்ப்பதற்குச் சிறியதாக இருக்கும். ஆனால்… உள்ளே நுழைந்த பிறகு பார்த்தால், பெரிதாகிக் கொண்டே போய் வியப்பூட்டும். மிக அருகில் போய், அண்ணார்ந்து பார்த்தால் கூரை தெரியாத அளவிற்கு விஸ்வருபமெடுக்கும். அந்த அளவு திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டிருக்கிறது தாஜ்மஹால்.

தாஜ்மஹால் சில அரிய தகவல்கள்!

தாஜ்மஹாலை கட்டி முடிக்க சுமார் 22 ஆண்டுகள் ஆயின. இத்த
னை ஆண்டுகளுக்கு என்ன காரணம்? தாஜ்மஹல் கட்ட தேவையான கட்டுமானப் பொருட்கள், குறிப்பாக விலையுய ர்ந்த நவரத் தினக் கற்களைத் தேடிப் பார்த்து தருவித்துக் கட்டியதால்தான் இத்தனை ஆண்டுகள் உருண்டேடியிருக் கின்றன என்று ஆய்வாளர் கள் கூறுகின்றனர். இந்தியா மட்டு மன்றி உலகின் பல நாடுகளிலிருந்தும் இத்தகைய பொருட்களை கொண்டுவந்துள்ளான் ஷாஜகான்.





ப்படி என்ன இதில் இருக்கிறது? சன்ன ரக ‘மக்ரானா’ சலவைக் கற்கள் ராஜஸ்தானிலிருந்தும், கரும் பச்சை மற்றும் ஸ்படிகக் கற்கள் சீனாவிலிருந்தும், நீல நிறக்கற்கள் திபெத்திலிருந்து ம், lapis and lazuli என்று சொல்லப்படும் மிக நுணுக் கமான சிற்பக் கலை வேலை களுக்குப் பயன்படும் நீலநிறக் கற்கள் ஆப்கானிஸ்தானிலிருந்தும் தருவிக்கப்பட்டன.
அதுமட்டுமல்ல! பச்சை வண் ண ஸ்படிகக் கற்கள் மற்றும் நீலம் கலந்த ஊதா நிறக் கற்கள் எகிப்திலிருந்தும், அடுக்கு படிக கொம்புக் கற்கள் (சிவப்பு) ஏமனிலிருந்தும், ஸஃபையர் என்னும் நீலக்கற்கள் ஸ்ரீலங்காவிலிருந்தும், பவழம் அரேபியா விலிருந்தும், பச்சை வண்ண கனிமம் ரஷியாவிலிருந்தும் தருவிக்கப்பட்டுள்ளன.







மேலும், ஸ்படிகக் கற்கள் இமயமலையிலிருந்தும், வெள்ளைக் கிளிஞ்சல்கள் மற் றும் முத்து சிப்பிகள் இந்திய பெருங்கடல் பகுதியிலிருந்தும் கொண்டுவந்து தாஜ்மஹாலை கட்டியிருக்கிறான் ஷாஜகான். ‘இதை கட்டிய கட்டடக் கலைஞர் இவ்வுலகத்தை சேர்ந் தவராக இருக்க முடியாது! இதன் வடி வமைப்பு அந்தக் கலைஞ ருக்கு சொர்க்கத்திலிருந்து கொடுக் கப்பட்டிருக்க வேண்டு ம் எனத் தெரிகிறது!’ என்று தாஜ்மஹா லை கட்டடத்தைப் புகழ்ந்து, ஷாஜகான் கல்வெட்டு ஒன்றில் கூறியிருக்கிறார்.

பழந்தமிழ் எழுத்து மற்றும் தமிழ் மொழி எழுத்து உருவான வரலாறு

தமிழ் மொழி (Tamil language) தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.

வரலாறு

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003).[7] இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன.[ஆதாரம் தேவை] பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.[8] பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.


தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

    சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
    சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
    பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
    மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)
    தற்காலம் (கிபி 1800 - இன்று வரை)

பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 க்கும் இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

மொழிக்குடும்பம்

தமிழ், தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, கைக்காடி, பெட்டக் குறும்பா, சோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும். தமிழ்


தமிழ்-மலையாளம் மொழிகள்: தமிழ்- மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும்.
தமிழ்-குடகு மொழிகள்: தமிழ்- குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும்.
தமிழ்-கன்னடம் மொழிகள்: தமிழ்- கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன.
திராவிட மொழிக் குடும்பம்: திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.


தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.

தமிழில் பெயர்க்கப்பட்டு 1723இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலின் முதல் அதிகாரம்





பதினைந்தாம் நூற்றாண்டிலோ பதினாறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்ட கிறித்தவ சமய வழிபாட்டு ஓலைச் சுவடிகள்






எழுத்துமுறை

எழுத்துரு மாற்ற வரலாறு

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.

வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.







தமிழில் பெயர்க்கப்பட்டு 1715 இல் தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலின் முதல் பக்கம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968 விழா மலரில்