Thursday, June 28, 2012

தாஜ்மகால் கட்ட‍ப்ப‍ட்ட‍ வரலாறு



மும்தாஜ் மறைந்தது தட்சிணப் பிரதேசத்தில். அங்கு புதைக்கப் பட்டிருந்த அவருடைய உடல் ஆறு மாதங்கள் கழித்து, இப்போது தாஜ் மஹால் அமைந்திருக்கும் இடத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மும்தாஜ் மறைந்த அடுத்த ஆண்டே தாஜ் மஹால் கட்டும் பணி தொடங்கியது.




யமுனை நதிக் கரையில் ஷாஜகானே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்தார். ராஜ புத்திர மன்னர் ஜெய்சிங்குக்குச் சொந்தமான தோட்டம்தான் இது. அதைக் கல்லறைக்காக வாங்க விரும்பினார் ஷாஜகான். பண மாகக் கொடுத்தால் நண்பர் தர்மசங்கடப்படுவாரோ என்று எண்ணி, நான்கு அரண்மனைகளைக் கொடுத்து தோட்டத்தை பண்டமாற்று செய்து கொண்டார். உடனே வேலை தொடங்கியது. கட்டடக்கலை-தோட்டக் கலை நிபுணர்கள், சிற்பிகள் உட்பட இரண்டாயிரம் பணியாளர்கள் களத்தில் இறங்கி உழைத்தனர்.




வெனிஸ் நகர சிற்பி வெரோனியோ, துருக்கியக் கட்டடக் கலைஞர் உஸ் தாத் இஸா அஃபாண்டி, லாகூர் கலைஞர் உஸ்தாத் அஹமத்… இப் படி பலரது பெயர்கள் தாஜ்மஹாலுக்கு வரைபடம் தந்தவர்களின் பட்டியல் நீளுகிறது. ஒவ்வொன்றையும் நேரடியாகப் பாரத்து ஒப்பதல் அளித்தவர் ஷாஜகான். கல்லறையைச் சுற்றிலும் புனித குர்ஆனிலிருந்து வாசகங்களைச் செதுக்க விரும்பினார் ஷாஜ கான்.

அதற்காக, பாரசீகத்திலிருந்து அமனாத்கான் என்ற கலைஞர் வரவழைக்கப் பட்டு அந்தப் பணி நிறைவேற்றப்பட்டது. அவருக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருடைய கையெழுத் தும் அங்கு செதுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் இடம் பெற்றிருக்கும் ஒரே கையெழுத்து அவருடையதுதான்!





தாஜ்மஹாலில் மிகப் பிரம்மாண்டமான கல்லறை மண்டபமும், சதுர வடிவிலான அழகுத் தோட்டமும் அமைந்திருக் கிறது. மண்டபத்தின் இடது-வலது பக்கங்களில் சிவப்பு சாண்ட்ஸ்டோன் கட்டடங்கள் (ஒரு மசூதி மற்றும் அதற்கு இணையான இன்னொரு கட்டடம்) எழுப்பப்பட்டு உள்ளன. கல்லறை மண்டபத்தில் வெள்ளை மார்பிள் கற்களும், விலை யுயர்ந்த மணி வகைகளும் பதிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

தொலைவிலிருந்து மட்டுமல்ல… வெளிப்புற வாயிலில் நுழைந்த பிறகு கூட பார்ப்பதற்குச் சிறியதாக இருக்கும். ஆனால்… உள்ளே நுழைந்த பிறகு பார்த்தால், பெரிதாகிக் கொண்டே போய் வியப்பூட்டும். மிக அருகில் போய், அண்ணார்ந்து பார்த்தால் கூரை தெரியாத அளவிற்கு விஸ்வருபமெடுக்கும். அந்த அளவு திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டிருக்கிறது தாஜ்மஹால்.

தாஜ்மஹால் சில அரிய தகவல்கள்!

தாஜ்மஹாலை கட்டி முடிக்க சுமார் 22 ஆண்டுகள் ஆயின. இத்த
னை ஆண்டுகளுக்கு என்ன காரணம்? தாஜ்மஹல் கட்ட தேவையான கட்டுமானப் பொருட்கள், குறிப்பாக விலையுய ர்ந்த நவரத் தினக் கற்களைத் தேடிப் பார்த்து தருவித்துக் கட்டியதால்தான் இத்தனை ஆண்டுகள் உருண்டேடியிருக் கின்றன என்று ஆய்வாளர் கள் கூறுகின்றனர். இந்தியா மட்டு மன்றி உலகின் பல நாடுகளிலிருந்தும் இத்தகைய பொருட்களை கொண்டுவந்துள்ளான் ஷாஜகான்.





ப்படி என்ன இதில் இருக்கிறது? சன்ன ரக ‘மக்ரானா’ சலவைக் கற்கள் ராஜஸ்தானிலிருந்தும், கரும் பச்சை மற்றும் ஸ்படிகக் கற்கள் சீனாவிலிருந்தும், நீல நிறக்கற்கள் திபெத்திலிருந்து ம், lapis and lazuli என்று சொல்லப்படும் மிக நுணுக் கமான சிற்பக் கலை வேலை களுக்குப் பயன்படும் நீலநிறக் கற்கள் ஆப்கானிஸ்தானிலிருந்தும் தருவிக்கப்பட்டன.
அதுமட்டுமல்ல! பச்சை வண் ண ஸ்படிகக் கற்கள் மற்றும் நீலம் கலந்த ஊதா நிறக் கற்கள் எகிப்திலிருந்தும், அடுக்கு படிக கொம்புக் கற்கள் (சிவப்பு) ஏமனிலிருந்தும், ஸஃபையர் என்னும் நீலக்கற்கள் ஸ்ரீலங்காவிலிருந்தும், பவழம் அரேபியா விலிருந்தும், பச்சை வண்ண கனிமம் ரஷியாவிலிருந்தும் தருவிக்கப்பட்டுள்ளன.







மேலும், ஸ்படிகக் கற்கள் இமயமலையிலிருந்தும், வெள்ளைக் கிளிஞ்சல்கள் மற் றும் முத்து சிப்பிகள் இந்திய பெருங்கடல் பகுதியிலிருந்தும் கொண்டுவந்து தாஜ்மஹாலை கட்டியிருக்கிறான் ஷாஜகான். ‘இதை கட்டிய கட்டடக் கலைஞர் இவ்வுலகத்தை சேர்ந் தவராக இருக்க முடியாது! இதன் வடி வமைப்பு அந்தக் கலைஞ ருக்கு சொர்க்கத்திலிருந்து கொடுக் கப்பட்டிருக்க வேண்டு ம் எனத் தெரிகிறது!’ என்று தாஜ்மஹா லை கட்டடத்தைப் புகழ்ந்து, ஷாஜகான் கல்வெட்டு ஒன்றில் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment